Tuesday, September 16, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇராஜாங்க அமைச்சர்களுக்கு தனி நிதி ஒதுக்கீடு இல்லை

இராஜாங்க அமைச்சர்களுக்கு தனி நிதி ஒதுக்கீடு இல்லை

இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் நாளை (06) இடம்பெறும் என ஆளும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, சுமார் 35 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதுடன், இராஜாங்க அமைச்சர் பதவிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியலை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதிலும் இராஜாங்க அமைச்சுக்கென தனியாக நிதி ஒதுக்கப்படாது எனவும், அவர்கள் தனது அமைச்சரவை அமைச்சருக்கு சொந்தமான அமைச்சின் கீழ் பணியாற்ற வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிரந்தர அமைச்சரவை நியமனத்திற்கு இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுஜன

மொட்டுக் கட்சியினால், அமைச்சரவை அமைச்சுப் பதவிகளுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பெயர் பட்டியலில் உள்ள சிலரின் பெயர்களுக்கு ஏற்பட்ட எதிர்ப்பே இந்த அமைச்சரவை நியமனத்தில் தாமதம் ஏற்படுவதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், தற்போதைய 18 அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம் இல்லை எனவும் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் மாத்திரமே அமைச்சரவையில் இணைவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles