ராஜபக்ஷர்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று அமைச்சர்களை நியமிப்பதற்காக பட்டியல்களை அனுப்பியது காக்கைதான் என அவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வழிதவறிச் சென்ற அனைவரும் எதிர்காலத்தில் காக்கையிடம் இருந்து பதவிகளைப் பெற வேண்டிய நிலை ஏற்படும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பெரமுனவின் பிணைக்கைதியாக மாறியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.