யாழ்ப்பாணம்- சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் இருந்து இரண்டு சந்தேக நபர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
இதில் ஒருவர் மீள கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் மற்றையவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்த இரண்டு சந்தேக நபர்களும் நேற்று புதன்கிழமை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.
இதனையடுத்தே நீதிமன்ற வளாகத்தில் சிறைக்காவலர்களின் பாதுகாப்பில் இருந்து இருவரும் தப்பியோடியுள்ளனர்.