முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தாய்லாந்திலிருந்து நாளைய தினம் (செப்டெம்பர் 02) நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோட்டாபய ராஜபக்ஷ, நாடு திரும்பும் பட்சத்தில், முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படும் அனைத்து விதமான சிறப்புரிமைகளும் வழங்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.