Tuesday, July 22, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒருநாள் செலவுக்கு போதுமான நிதி மட்டுமே மத்திய வங்கியிடமிருந்தது - லக்ஷ்மன் கிரியெல்ல

ஒருநாள் செலவுக்கு போதுமான நிதி மட்டுமே மத்திய வங்கியிடமிருந்தது – லக்ஷ்மன் கிரியெல்ல

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, ஆளுநர் பொறுப்பை ஏற்றபோது, வங்கியில் 20 மில்லியன் டொலர்களே வெளிநாட்டு ஒதுக்கங்களாக இருந்தன என்று நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த தகவலை இன்று வெளியிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலை தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவாக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றபோது, மத்திய வங்கியின் ஆளுநர் இதனை குறிப்பிட்டதாக லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இந்த தொகையானது, நாட்டின் ஒருநாள் செலவுக்கு மாத்திரமே போதுமான தொகையாகும் என்று கிரியெல்ல குறிப்பிட்டார்.

எனினும், இந்த நிலைமையை அந்த நேரத்தில் ஆளும் கட்சியினர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தவில்லை.

நல்லாட்சி அரசாங்கம், பொதுஜன பெரமுனவுக்கு ஆட்சியை ஒப்படைக்கும் போது மத்திய வங்கியில் 7800 மில்லியன் டொலர்கள் இருந்ததாக கிரியெல்ல சுட்டிக்காட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles