இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியைவழங்க அதிகாரிகள் மட்டத்திலான இணக்கத்திற்கு வந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவிக்கின்றது.
இலங்கை அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிடுகின்றது.
இதன்படி, 48 மாதங்களுக்கான இணக்கத்துடன் இந்த கடன் தொகை வழங்கப்படவுள்ளது.