Monday, September 15, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரசாயன உர தடை காரணமாக 600,000MT தரமற்ற அரிசி இறக்குமதி - மஹிந்த அமரவீர

இரசாயன உர தடை காரணமாக 600,000MT தரமற்ற அரிசி இறக்குமதி – மஹிந்த அமரவீர

இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக எடுக்கப்பட்ட தோல்வியின் விளைவாக, இலங்கைக்கு கிட்டத்தட்ட 600,000 மெற்றிக் டன் தரமற்ற மற்றும் நச்சு அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கையில் தடை செய்யப்பட்ட மோனோகுரோடோபோஸ் மற்றும் கிளைபோசேட் போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் நெல் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படும் நாடுகளில் இருந்து இலங்கை கிட்டத்தட்ட 600,000 மெற்றிக் டன் அரிசியை இறக்குமதி செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

“இலங்கையில் பயிரிடப்படும் அரிசியை விட இறக்குமதி செய்யப்படும் அரிசி மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியது. இலங்கையில் மொனோகுரோட்டோபோஸ், க்ளைபோசேட் போன்ற இரசாயனங்கள் நெல் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவதில்லை. எனினும், சில தரப்பினரின் நடைமுறைச் சாத்தியமற்ற ஆலோசனையின் அடிப்படையில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க விரும்பினோம். நெல் அறுவடையின் பற்றாக்குறையை சமாளிக்க தரமற்ற மற்றும் தீங்கு விளைவிக்கும் அரிசியை பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது ,” என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles