நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக 20 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையை அண்மித்துள்ள குறைந்த வளிமண்டல அமுக்கத்துடன் , மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, திருகோணமலை, அனுராதபுரம், புத்தளம், பொலன்னறுவை, மாத்தளை, மட்டக்களப்பு, குருநாகல், கம்பஹா, கேகாலை, கண்டி, நுவரெலியா, பதுளை, அம்பாறை, மொனராகலை, களுத்துறை, இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட 20 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஆலோசனைகள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறும், அவசர உதவிக்கு உள்ளூர் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறும் திணைக்களம் கோரியுள்ளது.