காகத்தின் கூட்டில் வளர்க்கப்பட்ட குயிலை போன்ற யோசனையே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்துள்ள பாதீடு யோசனையாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இந்த உதாரணத்தை இன்று நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த மாதத்தின் உணவுப்பணவீக்கம் 80 வீதமாக இருந்தநிலையில், இன்று மாலை இந்த மாதத்துக்கான உணவு பணவீக்கம் தொடர்பான தகவல் வெளியாகவுள்ளது.
இதன்போது உணவு பணவீக்கம் 100 வீதத்தை நெருங்கலாம் என்று ஹர்ஷ எதிர்வை வெளியிட்டார்.