முன்னாள் ஜனாதிபதிக்காக அரசாங்கம் 400 மில்லியன் ரூபா செலவிடவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (31) திடீரென நாடாளுமன்றத்திற்கு வந்த ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘நான் ஒரு விடயம் தொடர்பில் விளக்கமளிக்க விரும்புகிறேன். முன்னாள் ஜனாதிபதிக்கு அரசாங்கம் 400 மில்லியன் செலவழித்துள்ளதாக தகவல் பரவுகிறது. எனினும், உண்மையாக அவருக்கு அரச நிதியிலிருந்து நான்கு ரூபா கூட செலவு செய்யவில்லை. எனினும், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது மனைவிகளுக்கு வீடுகளை வழங்கி அவர்களைப் பராமரிக்க வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உள்ளது’ என்றார்.