பிரபல போதைப்பொருள் வர்த்தகரான ஹரக் கட்டாவின் உதவியாளரான, ‘குடு பட்டி’ என்றழைக்கப்படும் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜகிரிய மற்றும் தங்காலை பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய ஆண் மற்றும் 40 வயதுடைய பெண் (பட்டி) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்த 51 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 02 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக வெலிக்கடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.