இணக்கப்பாட்டின் அடிப்படையில், சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக அமெரிக்கா, இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
இலங்கையை சுபீட்சத்தை நோக்கி இட்டுச் செல்வதற்காக அமெரிக்கா வழங்கக்கூடிய ஒத்துழைப்புகள் தொடர்பில் கொழும்பில் நேற்று (29) நடைபெற்ற அமெரிக்கா – இலங்கை வணிக பேரவையில் உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார்.
சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான நிதி உதவி, விவசாயிகளுக்கு உரம் மற்றும் விதைகள், அரச நிதி முகாமைத்துவத்தை வலுப்படுத்துவதற்கான கல்வி பரிமாற்றம் மற்றும் பயிற்சி போன்றவற்றை இரட்டிப்பாக அதிகரிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.