Thursday, January 16, 2025
29.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீண்டும் அமைச்சுப் பதவி ஏற்க தயார் - தம்மிக்க பெரேரா

மீண்டும் அமைச்சுப் பதவி ஏற்க தயார் – தம்மிக்க பெரேரா

அமைச்சுப் பதவியேற்று சில தினங்களிலேயே அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்த முன்னாள் அமைச்சரும் பிரபல தொழிலதிபருமான தம்மிக்க பெரேரா மீண்டும் அமைச்சுப் பதவி ஏற்க தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு (29) தனியார் தொலைக்காட்சியொன்றில் நேரலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தம்மிக்க பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .

பொருளாதார அபிவிருத்தி தொடர்பான பொறுப்புகளுடன் கூடிய அமைச்சுப் பதவி வழங்கப்படுமெனின் அதனை ஏற்கத் தயார் என்றும் அமைச்சர்கள் பல மாதங்கள் செய்து முடிக்கும் பணிகளை தாம் வெறும் 10 நாட்களில் செய்து முடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்கும் திட்டம் தம்மிடம் உள்ளதாகவும் தலைகளை மாற்றுவதால் எந்த பயனும் இல்லை என்றும் நல்ல தலைவர்கள் அப்படி செய்யமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

கோட்டாவின் அமைச்சரவையில் பதவியேற்ற தம்மிக்க பெரேரா கடந்த காலங்களில் தற்போதைய ஜனாதிபதி ரணிலை கடுமையாக விமர்சித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles