மலைநாட்டு பிரதேசங்களில் இருந்து மரக்கறிகள் மற்றும் பழவகைகளை கொழும்புக்கு எடுத்து வர ரயில்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
இதற்காக ஹாலி எல ரயில் நிலையத்தில் இருந்து கொழும்பு ரயில் நிலையத்துக்கு விசேட ரயில் சேவை மேற்கொள்ளப்படவுள்ளது.
அதேபோன்று கொழும்பில் இருந்து பதுளைக்கான ரயிலில் மொத்த விற்பனைக்கான பொருட்களை எடுத்துச்செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.