வலப்பனை மஹ ஊவா பிரதேசத்தில் பேருந்து ஒன்று வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் 19 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் பலத்த காயங்களுக்கு உள்ளான 6 பேர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பிலிருந்து திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக வலப்பனை பகுதிக்கு வந்திருந்த பேருந்து ஒன்றே, இவ்வாறு திரும்பிசெல்லும் வழியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.