சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு நிலவுவதால் எதிர்காலத்தில் பாண் ஒரு இறாத்தல் 300 ரூபாவாக அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.
டொலர் நெருக்கடியால் கோதுமை மா இறக்குமதியை நிறுவனங்கள் கட்டுப்படுத்தியதன் காரணமாக தற்போது 50 கிலோ எடை கொண்ட கோதுமை மா மூடையின் விலை 20,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
கோதுமை மா தட்டுப்பாடு காரணமாக பல பேக்கரிகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.