கடந்த மே 10 ஆம் திகதி மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனையும் உட்பட மூவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இச்சந்தேகநபர்கள் மூவரும், சட்டவிரோத கூட்டத்தை ஏற்பாடு செய்தமை, ஊரடங்கு சட்டத்தை மீறியமை, அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டில் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள், பிட்டபெத்தர மற்றும் கொழும்பு-15 பிரதேசங்களைச் சேர்ந்த 31,51 மற்றும் 52 வயதுடையவர்களென பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு குற்றவியல் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.