பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை எட்டிய பிறகு, சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என்று தெரிவிக்கப்படுள்ளது.
நாட்டின் வெளி கடன்கொடுநர்கள் குறிப்பாக சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை சவால்களைக் கருத்தில் கொண்டு, ஆறு மாதங்கள் தாமதமாகலாம் என பொருளியல் நிபுணர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.
தற்போது இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் குழு, பணியாளர் மட்டத்திலான உடன்பாட்டை எட்டுவதற்கான நோக்கத்துடன் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருகிறது.
இந்த பணி நாளை மறுதினம் புதன்கிழமை முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், பேச்சுவார்த்தைகளின் முடிவில் பணியாளர்கள் அளவிலான உடன்பாட்டை எட்டுவதற்கு மத்திய வங்கி எதிர்பார்க்கிறது.