Wednesday, July 16, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டு60 சதவீதமான நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள்

60 சதவீதமான நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள்

கொழும்பின் சில பிரதேசங்களில் இன்றைய தினம் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான வரிசை குறைந்தளவில் காணப்பட்ட போதிலும் நாட்டின் பிற மாகாணங்களில் தொடர்ந்தும் மக்கள் வாகனங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

பல நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இன்மையால் மூடப்பட்டுள்ளமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனங்களுக்கு உட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கடந்த சில நாட்களாக வரையறைக்கு உட்பட்ட எரிபொருள் விநியோகமே இடம்பெற்றது.

இதன்காரணமாகவே எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் வாகனங்களுடன் வரிசையில் காத்திருக்கின்றமை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 60 சதவீதமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles