எரிபொருள் மற்றும் நிலக்கரி கொள்வனவு தொடர்பில் நாடாளுமன்ற குழுவொன்றை அமைப்பதற்கான பிரேரணையை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (29) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
நாடாளுமன்றக் குழுக்களின் தலைவர் பதவிகளை எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் கேட்டு வருவதால், தான் முன்மொழிந்த குழுவின் தலைவர் பதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதாக பிரேரணையை முன்வைத்த அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க போன்ற அறிவாற்றலுடைய ஒருவரை அதன் தலைவராக நியமித்தால் சிறந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.