பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி மற்றும் அதன் பின்னர் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிப்பு மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பான விசாரணைகள் தொடர்பிலேயே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.