நாட்டில் போதியளவு எரிபொருள் இருப்பதாக இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை ஒன்றில், பெற்றோல், மண்ணெண்ணெய், டீசல் ஆகிய எரிபொருளின் விநியோகம் சீராக இடம்பெறும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் CPC கோரியுள்ளது.