இலங்கை மின்சார சபையால் செய்யக்கூடிய பணிகள் கூட தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன்படி, மரக்கிளைகளை வெட்டுதல், புதிய இணைப்புகள் வழங்குதல், இணைப்புகளை துண்டித்தல் போன்ற சேவைகளை வழங்குவதற்கு போதியளவு பணியாளர்கள் இருந்த போது இந்த சேவைகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மின்சார சபையை மறுசீரமைக்கும் போது இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.