முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது பதவி காலத்தை பூர்த்தி செய்யாமல், இடைவிலகியவர் என்ற அடிப்படையில், அவருக்கு உத்தியோகப்பூர்வ வீடு ஒன்றை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் அவரது மிரிஹானையில் உள்ள தனிப்பட்ட இல்லத்தை புதுப்பித்து வழங்க முடியும் என அரசாங்கம் அவருக்கு தெரியப்படுத்தியுள்ளது.
அத்துடன் மேலதிக பாதுகாப்பினை வழங்கவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.