தமக்கு பிரதமராக விருப்பம் இல்லை எனவும், சுதந்திரக் கட்சி உறுப்பினர் எவருக்கும் அரசாங்கத்துடன் இணைவதற்கு அனுமதி வழங்கவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று (28) மஹரகமவில் நடைபெற்ற தொகுதி செயற்பாட்டாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.