நாட்டில் தடைசெய்யப்பட்ட மற்றும் விவசாய திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பல போலியான விவசாய இரசாயன பொருட்கள் சந்தையில் விற்பனைக்கு உள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த வேளாண் இரசாயனங்களை பயன்படுத்துவதால் பூச்சி கட்டுப்பாடும் சரியாக நடைபெறுவதில்லை.
இவற்றில் சில இந்தியா போன்ற நாடுகளில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
பூச்சிக்கொல்லி மருந்து முத்திரையில் குறிப்பிடப்பட வேண்டிய தகவல்கள் உரிய முறையில் காட்சிப்படுத்தப்படவில்லை என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.