Friday, September 12, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையின் நிதி நெருக்கடியை தீர்க்க தயாராகும் ஜப்பான்

இலங்கையின் நிதி நெருக்கடியை தீர்க்க தயாராகும் ஜப்பான்

இலங்கையை கடன் நெருக்கடியில் இருந்து விரைவாக மீட்பதற்கான நடவடிக்கைகளுக்கு ஜப்பான் தயாராகி வருவதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இதற்காக இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகளைக் கொண்டு மாநாடு ஒன்றை நடத்தும் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜப்பான் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் கடன்களை மறுசீரமைப்பு செய்து, வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதே இதன் நோக்கமாகும்.

ஆனால் இதில் இலங்கைக்கு பெருமளவு கடன்களை வழங்கியுள்ள சீனா கலந்துகொள்ளுமா என்பதில் தெளிவான விபரம் கிடைக்கவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் செல்லும் போது, இந்த விடயம் இறுதிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles