பொரளை பிரதேசத்தில் 3 கிலோ அரிசி மற்றும் சிறுதானிய உணவுப் பொதியை திருடிய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், பொரளை பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் 4 நாட்களாக பிள்ளைகள் பட்டினியால் வாடிய காரணத்தினால் இந்த பொருட்களை திருடியுள்ளார்.
பொரளை பொலிஸாருக்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர் உண்மையைக் கூறியதையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திருடப்பட்ட பொருட்களின் பெறுமதியை தீர்த்து வைத்ததுடன், அறிவுறுத்தல்களை வழங்கிய பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.