Saturday, January 31, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமற்றுமொரு சிறுத்தை உயிரிழப்பு

மற்றுமொரு சிறுத்தை உயிரிழப்பு

வலையில் சிக்கிய மற்றுமொரு சிறுத்தை இன்று (25) உயிரிழந்துள்ளதாக நுவரெலியா வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஸ்ட்ஹோல் தோட்டத்தின் தேயிலை தோட்டத்தில் உள்ள வலையில் சிக்கிய சிறுத்தை குட்டி இன்று காலை அதே இடத்தில் உயிரிழந்துள்ளது.

தேயிலைத் தோட்டத்தில் சுற்றித் திரிந்த விலங்குகளை வேட்டையாடுவதற்காக தேயிலை மரத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வலையில் சிறுத்தையின் வயிறு சிக்கியுள்ளது.

இதனை கண்ட தோட்டத் தொழிலாளர்கள் குழுவொன்று சிறுத்தை வலையில் சிக்கியுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவித்ததன் பேரில் வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

உயிரிழந்த 2 வயது சிறுத்தை தொடர்பில் நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் குட்டியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ரன்தெனிகல கால்நடை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles