Wednesday, December 3, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமருந்து தட்டுப்பாடுக்கு விரைவில் தீர்வு

மருந்து தட்டுப்பாடுக்கு விரைவில் தீர்வு

மருந்துகளை இறக்குமதி செய்யும் கொள்முதல் செயல்முறையை வினைத்திறனாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

UNICEF இன் பிரதிநிதிகள் குழுவுடனான சந்திப்பின் போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் நடவடிக்கைகள் தற்போது 3 முதல் 4 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

​​அதிக வெளிப்படைத்தன்மையைப் பாதுகாப்பதன் மூலம் நோயாளிகளுக்கு தட்டுப்பாடு இன்றி தொடர்ச்சியாக மருந்துகளை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

நாட்டில் மருந்து தட்டுப்பாடு படிப்படியாக குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர்இ எதிர்வரும் சில வாரங்களில் மேலும் குறைவடையும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், பற்றாக்குறையாக உள்ள மருந்துகளை உடனடியாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles