முத்துராஜவெல பெற்றோலிய முனையத்திலிருந்து பெற்றோல் ,டீசல் விநியோகங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
எனவே நாளை முதல் பேருந்து சேவையை 50 சதவீதமாக குறைக்க வேண்டியுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், நாட்டில் மீண்டும் எரிபொருள் நெருக்கடி உருவாகி வருவதாக தெரிவித்தார்.
மேலும், கடந்த மூன்று நாட்களாக CTB டிப்போக்களில் இருந்து முறையாக டீசல் கிடைக்கவில்லை என்றும், இன்றும் பேருந்துகள் முழுமையாக இயங்கவில்லை என்றும் அவர் கூறினார்.
இன்றும் தென் மாகாணத்தில் பல பேருந்துகள் இயங்க முடியாத நிலையில் இருப்பதாகவும், அரசாங்கத்திடம் இருந்து விரைவான பதிலை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.