போதிய எரிபொருள் நாட்டில் கையிருப்பில் இல்லை என எரிபொருள் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது முத்துராஜவலையில் உள்ள எரிபொருள் முனையத்தில் இருந்தான விநியோகப் பணிகள் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்கப்பெறவில்லை.
இலங்கை அரச பேருந்துச்சாலைகளுக்கு மட்டுமே அங்கிருந்து எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலைமையை பரிசீலித்து வருவதாகவும், எதிர்வரும் நாட்களில் எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வரவிருப்பதாகவும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்தார்.