மண்ணெண்ணெய் விலையை மாற்றியமைப்பது பல வருடங்களுக்கு முன்னரே நடந்திருக்க வேண்டிய ஒன்று என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மானிய விலையில் மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்பட்டமை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நட்டத்திற்கு முக்கியக் காரணம் என அவர் மேலும் தெரிவித்தார்
இந்த விலையேற்றத்தின் மூலம் மண்ணெண்ணெய் விலை தற்போது செலவுக்கு ஏற்றதாக இருந்ததாகவும் அமைச்சர் கூறுகிறார்.
மண்ணெண்ணெய், மீன்பிடி மற்றும் பெருந்தோட்டத் துறைகளைச் சார்ந்துள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நேரடி பண மானியத்தை வழங்க அரசாங்கம் தற்போது முன்மொழிந்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டார்.