Tuesday, September 16, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவசந்த முதலிகே உள்ளிட்டோரை TIDயிடம் ஒப்படைக்க IGP பணிப்பு

வசந்த முதலிகே உள்ளிட்டோரை TIDயிடம் ஒப்படைக்க IGP பணிப்பு

போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைதான பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவர் சீஐடியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்கள் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டிருந்தால், அவர்களை பயங்கரவாத தடுப்பு பிரிவுடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என பொலிஸ் திணைக்கள பேச்சாளர் தெரிவித்தார்.

அண்மையில் கொழும்பில் போராட்டம் நடத்திய போது அவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களை 90 நாட்கள் தடுப்பில் வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கி இருந்தது.

இந்த நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்டத் தரப்பினர் கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles