உரிய காலம் வரும்போது அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என்றும் நாட்டின் அனைத்து நெருக்கடிகளுக்கும் கோட்டாபய பொறுப்பல்ல என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போது அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
தாம் அரசியலை தொடர்வதா இல்லையா என்பது குறித்தும், கட்சியின் தலைமை பொறுப்பில் இருக்க வேண்டுமா என்பதையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தான் தீர்மானிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தேவையேற்படின் அரசியிலிலிருந்து தான் வெளியேற தயாராக இருப்பதாகவும், தான் சட்டத்தரணி என்பதால், நீதிமன்றப் பணிகளில் ஈடுபட முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இந்த நெருக்கடிக்கு தான் உட்பட முன்னர் ஜனாதிபதி பதவி வகித்தோரே காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.
தற்போதையை நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்க ரணில் விக்ரமசிங்கவினால் மட்டுமே முடியும் என மஹிந்த மேலும் தெரிவித்தார்.