Tuesday, July 29, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅதிக கட்டணம் வசூலித்த பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அதிக கட்டணம் வசூலித்த பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்த நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது இந்த பேருந்துகள் அடையாளம் காணப்பட்டதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக பணத்தை வசூலித்தமை, கட்டண விபரங்களை காட்சிப்படுத்தாமை, பயணச்சீட்டுக்களை வழங்காமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles