மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு தற்போது 100 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் அதிக வருமானம் பெறும் விமானப் பயணிகளுக்காக ரன் மாவத்தை என்ற புதிய சேவை முனையத்தை நேற்று (18) திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அதன் காரணமாக எதிர்காலத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கை மூலம் பங்குகள் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.