Monday, September 15, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநிர்மாணப் பணி நிறைவடையாத கட்டிடத்தை திறக்க சென்ற சுசிலுக்கு எதிர்ப்பு

நிர்மாணப் பணி நிறைவடையாத கட்டிடத்தை திறக்க சென்ற சுசிலுக்கு எதிர்ப்பு

யாழ் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான கிளிநொச்சி தொழில்நுட்ப பீடத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையாத கட்டடத்தை திறப்பதற்கு நேற்று (18) கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் சென்றுள்ளார்.

இதன்போது, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் கூச்சலிட்டு அமைச்சரை பல்கலைக்கழகத்திற்கு வரவிடாமல் தடுத்துள்ளனர்.

இன்னும் கட்டி முடிக்கப்படாத தொழில்நுட்ப பீட கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக அமைச்சர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் காரணங்களுக்காக கட்டி முடிக்கப்படாத கட்டிடத்தை திறக்க அனுமதிக்க முடியாது என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சரின் வருகையை முன்கூட்டியே அறிந்த மாணவர்கள் வளாகத்திற்கு அமைச்சர் வருவதற்கு முன்பே இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

மாணவர்களின் போராட்டம் காரணமாக அமைச்சர் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles