Monday, November 18, 2024
27.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும்

அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும்

அத்தியாவசிய உள்ளிட்ட ஏனைய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படாவிட்டால் சில பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரித்துள்ளது.

தற்போது அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை மாத்திரமே அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக சந்தையில் ஏனைய பொருட்களுக்கான விலைகளை வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் அடிக்கடி அதிகரிப்பதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

பொதி செய்யப்பட்ட உற்பத்தி சார்ந்த பொருட்களின் விலைகள் அண்மைய காலமாக பலத் தடவைகள் அதிகரிக்கப்பட்டன.

அரசாங்கத்தினால் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படாமையே இதற்கான காரணம் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிக விலைக் காரணமாக சில பொருட்களை நுகர்வோர் கொள்வனவு செய்வதை தவிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles