கடந்த சில நாட்களாக இலங்கை மத்திய வங்கி எடுத்த தீர்மானங்கள் காரணமாக பொருளாதாரம் ஓரளவு சாதகமான முடிவுகளை பெற்று வருவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிற்குத் தேவையான எரிபொருள், எரிவாயு, உணவு மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு போதுமான அந்நியச் செலாவணி இருப்பதாகவும் அவர் கூறினார்.
பணவீக்கம் 70 வீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என ஊகிக்கப்பட்ட போதிலும், நிலைமை குறைந்துள்ளதாகவும் பணவீக்கம் 60 வீதத்திற்கும் அதிகமாக இருப்பதாகவும் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.