இலங்கை மத்திய வங்கி கடந்த காலங்களில் எடுத்த தீர்மானங்கள் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் சில சாதகமான முடிவுகள் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘பணவீக்கம் 60% அதிகமாக உள்ளது என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அந்நியச் செலாவணி பற்றாக்குறை ஓரளவு குறைந்துள்ளது. நாட்டில் உள்ள வங்கிகளில் ஓரளவு அந்நியச் செலாவணி உள்ளது. இறக்குமதி செலவு குறைந்துள்ளது. ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது.” என்றார்.