Thursday, May 8, 2025
27.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகெய்லி ஃப்ரேசரை தேடி விசாரணை

கெய்லி ஃப்ரேசரை தேடி விசாரணை

நீதிமன்றத்தினால் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், பிரித்தானிய பெண்ணான கெய்லி ஃப்ரேசரை கண்டுபிடிக்க முடியவில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அவரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் தொடர்பாக உள்ளடக்கத்தை வெளியிட்ட குறித்த ஸ்கொட்லாந்து சுற்றுலாப் பயணி கெய்லி ஃப்ரேசருக்கு வழங்கப்பட்ட விசாவை நிறுத்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் முடிவு செய்தது.

ஆகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேறுமாறும் திணைக்களம் அவருக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles