Tuesday, May 20, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடிசம்பர் முதல் வாரம் வரை பாடசாலைகளுக்கு விடுமுறை இல்லை

டிசம்பர் முதல் வாரம் வரை பாடசாலைகளுக்கு விடுமுறை இல்லை

எதிர்வரும் சில மாதங்களில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் விசேட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி டிசம்பர் முதல் வாரம் வரை மேலதிக விடுமுறை இல்லாமல் வாரத்தின் ஐந்து நாட்களும் பள்ளிகளை நடத்த கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

கொழும்பில் நேற்று (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் நெருக்கடியுடன் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் ஜூன் 27ஆம் திகதி முதல் வாரத்தில் 03 நாட்கன் மாத்திரம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில், கடந்த திங்கட்கிழமை (15) முதல் அனைத்து அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள் வழமை போன்று வாரத்தில் ஐந்து நாட்களும் நடத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles