இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்துக்கு மன்னாரில் 286 மெகாவோட் மற்றும் பூநகரியில் 234 மெகாவோட் திறன் கொண்ட இரண்டு காற்றாலை திட்டங்களுக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மேலான முதலீட்டில் தற்காலிக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்தார்.