எதிர்வரும் முதலாம் திகதி முதல் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு அதற்கிணங்க இந்த வாரம் கட்டண அதிகரிப்பை அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடக் கூடும் என நீர் வழங்கல் மற்றம் வடிகாலமைப்பு சபையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய தற்போது வீட்டுப்பாவனைக்காக அறவிடப்படுகின்ற நீர் கட்டணத்தை 60 முதல் 70 சதவீதம் வரையில் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வணிக ரீதியான நீர் விநியோகத்துக்கு அறவிடப்படும் கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளது.
இதற்கமைய தற்போது அறவிடப்படும் சேவை கட்டணத்தை 50 ரூபாவில் இருந்து 300 ரூபாவாக அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.நீர் கட்டணத்தை 60 – 70 மூ வரை அதிகரிக்க தீர்மானம்