பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி கப்பலான, யுவான் வாங் 5 இன்று காலை 7.50 அளவில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்தக் கப்பல் கடந்த 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவிருந்தது எனினும், தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி இந்தியா கடுமையான கவலைகளை எழுப்பியிருந்த நிலையில் அதன் வருகை தாமதமானது.
இந்த நிலையில், குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வருவதற்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சு கடந்த 13 ஆம் திகதி அனுமதி வழங்கியயமை குறிப்பிடத்தக்கது.