எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் நேற்றைய தினம் (15) விலை மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு விலை சூத்திரத்தின் அடிப்படையில் இந்த தடவை விலையை மாற்றாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக சந்தையில் எரிபொருள் விலை பாரியளவில் (கூ88-93) குறைந்திருந்தாலும் அரசாங்கம் அதனை இலங்கையில் அமுல்படுத்தாமலிருக்க தீர்மானித்திருக்கிறது.
இதுகுறித்து அமைச்சரவையிலும் நேற்றைய தினம் விளக்கமளிக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.