டுபாய் விமான நிலையத்தில் வைத்து கைதான பாதாள உலகக்குழுவின் உறுப்பினர் ‘ஹரக் கட்டா’ என்றழைக்கப்படும் நந்துன் சிந்தக, இந்த வாரம் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும், அரச புலனாய்வுப் பிரிவினரும் தற்போது அதற்கான ஏற்பாடுகளை தயார் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
‘ஹரக் கட்டா’ கடந்த 11ஆம் திகதி மலேசியா செல்லவிருந்த போது கைது செய்யப்பட்டார்.
மேலும் அவரது மனைவி என கூறப்படும் பெண்ணும் இதன்போது கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.