Wednesday, August 6, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநெத்மி அஹிம்சா வலுக்கட்டாயமாக நாமலிடம் அழைத்துச் செல்லப்பட்டாராம்

நெத்மி அஹிம்சா வலுக்கட்டாயமாக நாமலிடம் அழைத்துச் செல்லப்பட்டாராம்

2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தப் போட்டியில் இலங்கைக்காக வெண்கலப் பதக்கத்தை வென்ற நெத்மி அஹிம்சா அண்மையில் நாடு திரும்பினார்.

விளையாட்டு அமைச்சின் உறுப்பினர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரும் அவரை வரவேற்க வருகை தந்திருந்ததுடன், நெத்மியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் விளையாட்டு அமைச்சு விசேட வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்வு இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

நிகழ்வில் பங்கேற்பதற்கான போக்குவரத்து வசதியை தயார் செய்து கொடுப்பதாக அப்பகுதியில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் வாக்களித்துள்ளார்.

அதற்கமைய, குறித்த நபரின் வாகனத்தில் நெத்மி அஹிம்சாவும் அவரது பயிற்றுவிப்பாளரும் நிகழ்வில் கலந்துக் கொள்வதற்காக பயணித்துள்ளனர்.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையில் விளையாட்டு அமைச்சில் நடைபெறவிருந்த நிகழ்வுக்கு அவரை அழைத்துச் செல்வதற்கு பதிலாக பொதுஜன பெரமுன பிரதேச சபை உறுப்பினர், அவர்களை நாமல் ராஜபக்ஷவிடம் அழைத்துச் சென்றுள்ளார்.

நெத்மி அஹிம்சா சிறுமியை வலுக்கட்டாயமாக தன்னிடம் அழைத்து வந்ததாக முன்னணி நாளிதழில்வெளியான செய்தி தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ நேற்று (14) தங்கல்ல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles