அரசாங்க செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்காக திறைசேரியின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அப்பாற்பட்ட செலவுகள் மேற்கொள்ளப்படுமாயின், அதற்கான செலவினங்களை விடயத்துக்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளது.
திறைசேரி செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள ‘பொது செலவினங்களைக் கட்டுப்படுத்துதல்’ என்ற சுற்றறிக்கையின் விதிமுறைகளை அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களும் நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.